புதிய உலகம்.கொம்: தனது எதிர்காலத்துக்காக எதிர்நீச்சல் போடும் குழந்தை

தனது எதிர்காலத்துக்காக எதிர்நீச்சல் போடும் குழந்தை

இதயக்கோளாறுடன் பிறந்த றொஷானா ஒக்டென் என்ற சிறுமிக்கு பிறந்த ஆறு வாரங்களிலேயே இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் வலுவான இதயத்துடிப்பை ஏற்படுத்துவதற்காக நீச்சலில் ஈடுபடுவதற்கு வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்டது. எனவே அடுத்த மாதத்துடன் இரண்டு வயதாகும் இந்த நேரத்தில் தனது வெளிச்சமான எதிர்காலத்திற்காக சிறுவயதிலேயே நீச்சலடிக்கத் தொடங்கிவிட்டார் றொஷானா.


இதுபற்றி அவரது தாயாரான 26 வயதுடைய சானம் கூறுகையில், அது ஒரு பயங்கரமான தருணமாக இருந்தது என்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளாதிருந்திருந்தால் இன்று இவள் உயிருடன் இருந்திருக்க மாட்டாள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
-------------------------------------------------------------------------------------

2011 www.Puthiyaulakam.com. All Rights Reserved. - Designed by EVERSCENES NETWORK