இன்றைய செய்திகள்

தற்கொலை முடிவால் உடல் பருமன் குறைந்த அதிசயம்....!!

பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் உடல் எடை அதிகமாக உள்ளதால் கடும் பாதிப்புக்குள்ளாகி மனமுடைந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் வியக்கத்தக்க வகையில் அவர் சாவதற்காக அருந்திய விஷம் அவருடைய உடல் எடையை குறைத்துள்ளது.
பிரிட்டனின் கிழக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த 22 வயதான, மைக் வாட்பி என்ற வயது இளைஞர் தன் தன் 21வது வயதில், 133 கிலோ எடை உடையவராய் இருந்துள்ளார். தொடர்ந்து அவரது உடல் பருமண் அதிகரிக்க 29வது வயதில் 209 கிலோவை எட்டினார். தன்னால் எவ்வளவு முயன்றும் தன் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை என்ற பட்சத்தில், அதிகபடியான விஷ மாத்திரைகளை உட் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தக்க சமயத்தில் அவரை மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்துள்ளார். இந்நிகழ்வின் பின், அவருடைய உடல் எடை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்துள்ளது. இதனை உணர்ந்த மைக் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அவர் தற்கொலைக்காக எடுத்துக்கொண்ட விஷம், அவருடைய உடல் எடையை குறைக்க உதவி செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் பெரும் மகிழ்ச்சி கொண்ட இவர், உடனே தன் உடலை விரைவாக மெலிய வைக்க மனம் தளராமல் தினமும் 3 மணிநேரம் உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து வந்தார். இதன் விளைவாக 18 மாதங்கள் கழித்து தற்போது இவர் 114 கிலோ எடையுடன் ”மிஸ்டர் மஸ்ல்ஸ்” என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். தற்கொலை செய்து கொண்டபோது அப்பகுதியில் பிரபலமான இவர் உடல் எடையை குறைத்ததும் பெரும் பெயரை பெற்றுள்ளார்.


Read More »

துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?

சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.
அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது.

மேல படிங்க.

பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம்.

யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்..

Read More »

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றி உச்சியில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்ப காலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப் போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது. பெண்கள் தெருவில் செல்லும் போது தலை குனிந்து செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, அவளது உச்சிநெற்றி நன்கு தெரியும்.
அதில், வகிடுப்பொட்டு இருந்தால் திருமணமானவள் என்பதை புரிந்துகொண்டு விலகிச்செல்வர். அதேசமயம் திருமணமான ஆண்கள் கால்விரலில் மெட்டி அணிந்து செல்லும் போது, பெண்கள் அவர்களது மெட்டியை கண்டு, அவனை எதிர் நோக்காமல் விலகிச் செல்வர். இவ்வாறு ஆணோ, பெண்ணோ திருமணம் ஆனவர்களா என்பதை உணர்த்துவதற்கான அடையாளமாகவே இவை அமைந்தன.
திருமணமான, பெண்கள், மெட்டி, அணிவது, ஏன்?

பிற காரணம்…: பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. முக்கியமாக கருப்பை நோய்களை கட்டு படுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி என்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் எமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பி

Read More »

உலகின் அதி பயங்கரமான விஷத் தோட்டம் (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் “உயிரை கொல்லக் கூடியது” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் உலகின் அதி பயங்கரமான விஷத் தோட்டம் அமைந்துள்ளது. வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள ஆலன்விக்(Alnwick) என்ற தோட்டத்தில் பல ஏக்கர் நிலத்தில் கண்ணைகவரும் வண்ண வண்ண நிறங்களில் மனம் வீசும் ரோஜா மலர்கள் மற்றும் நீரூற்றுகள் என பல வகையான அம்சம்சங்கள் உள்ளன.

இந்த தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிட்டத்தட்ட 100 வகையான விஷ செடிகளுக்கென்று தனியாக ஒரு தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் தோட்டமான இதன் வாசல் கதவுகளில், எலும்பு கூடுகள் வரையப்பட்டு ”இந்த செடிகள் உயிரை கொல்லக் கூடியது” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரிய நிறத்திலான பெரிய இரும்பு கதவுகளுக்கு பின்னால் அமைந்துள்ள அந்த தோட்டத்தினுள் செல்லும் பார்வையாளர்கள், ஒரு இடத்தில் நிற்ககூடாது என்றும், செடிகளையும் மலர்களையும் தொடக்கூடாது, நுகரக்கூடாது என்று வெளிப்படையாக அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனெனில் அந்த விஷ செடிகளை சில நிமிடங்கள் தொடர்ந்து முகர்ந்தால் கூட பலவிதமான பக்கவிளைவுகள் முதல் மரணம் கூட ஏற்படும் அபாயமுள்ளது. இங்கு உள்ள சில செடிகளின் பாகங்களை உட்கொள்வதாலோ அல்லது நுகர்வதாலோ அதீத தூக்கம், வாந்தி, கோமா போன்ற பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இங்குள்ள செடிகளில் ஒன்றான மான்க்ஸ்ஹுட்(monkshood) என்பதன் வேர்களை மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் சிறிது போட்டால் போதும், அது மொத்த கிராமத்தையும் கூண்டோடு கொள்ளும் அளவுக்கு வீரியம் வாய்ந்தது. 

Read More »

பிறந்தவுடன் நீச்சல் அடித்த அதிசய குழந்தை

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே நீச்சல் குளத்தில் இறக்கி விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த சார்லஸ் (Charles)என்ற குழந்தை நீச்சல் குளத்தில் குளித்த மிக சிறிய குழந்தை என்ற பெயர் பெற்றுள்ளது.


இக்குழந்தை பிறந்து வெறும் 31 மணி நேரம் 46 நிமிடங்கள் தான் ஆகியுள்ளது. அதற்குள் தனது தந்தை சிமன் (Siman age - 31) கையில் அமர்ந்து கொண்டு நீச்சல் குளத்தில் இறங்கியுள்ளது.

பச்சிளம் குழந்தையான சார்லஸ் பிஞ்சி கைகளுடன், கண்களை மூடிக்கொண்டு தனது தந்தையுடன் தண்ணீரில் உள்ள காட்சி அனைவரையும் கண்களையும் கவர்ந்துள்ளது. மேலும் இவரின் தந்தை குழந்தைகளின் நீச்சல் பள்ளிக்கூடத்தில் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சிமன் கூறுகையில், சார்லஸ் 30 மாதங்களில் நன்றாக நீந்தவும், மூச்சை அடக்கவும் கற்றுக் கொள்வார் என கூறியுள்ளார். 

Read More »

மரத்தில் தோன்றிய ஜீசஸ் உருவம்! (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் நபர் ஒருவர் வெட்டிய மரத்தில் கிறிஸ்துவ கடவுள் ஏசு நாதரின் உருவமிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டென்னிசி (Tennesee) மாநிலத்தில் வசிக்கும் டேனியல் டர்பிவில்லி (Daniel Turbeville) என்ற நபர் மரக்கடை வைத்திருக்கிறார்.

இவர் மரம் ஒன்றை அறுத்துக் கொண்டிருந்தபோது, அதன் தண்டு பகுதியில் இறைவன் ஏசு கிறிஸ்துவின் உருவத்தை பார்த்ததால் திடீரென திகைப்பில் ஆழ்ந்துள்ளார்.


ந்நிலையில் கிறிஸ்துவின் உருவம் தனக்குத்தான் இப்படித் தெரிகிறதா? இல்லை மற்றவர்களுக்கும் தெரிகிறதா? என்பதனை கண்டுபிடிக்க பார்வையாளர்களை அழைத்து வந்து அந்த மரத்தை காட்டியுள்ளார். இச்செய்தி அப்பகுதியில் காட்டுத் தீயாய் பரவவே, அங்குள்ள 70 சதவீதம் பேர் மரத்தில் ஏசு கிறிஸ்து தெரிவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஏசு நாதரின் உருவம் கொண்ட இந்த மரத்தை பல்வேறு நபர்கள் விலைக்குக் கேட்டும் அதனை கொடுக்காமல் தேவலாயம் ஒன்றிற்கு வழங்கியுள்ளார்.

Read More »

5 பேருக்கு மறுபிறவி கொடுத்த உலகின் 3 வயது குட்டி இளவரசி

சீனாவில் 3 வயது குழந்தையின் உறுப்பு தானத்தின் மூலம் 5 பேர் மறுபிறவி எடுத்துள்ள சம்பவம் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்ஸி (Jiyanksi) மாகாணத் தலைநகரான நான்சங் (Nansong)  நகரை சேர்ந்த 3 வயது சிறுமியான லியு ஜிங்யாவோ (Leu Jingyavo) கடந்த சில மாதங்களாக தளர்வாகவும், சோர்வாகவும் காணப்பட்டாள்.

இந்நிலையில் மருத்துவரை அணுகியபோது, ஒருவகை மூளைப்புற்று நோயால் பாதிக்கப்படுள்ள லியு ஜிங்யாவோ, இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று கூறி மருத்துவர்கள் கையை விரித்து விட்டனர்.

இதற்கிடையில், ஜியாங்ஸி மாகாண அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லியு ஜிங்யாவோவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தலைப்பகுதி மெல்ல,மெல்ல வீங்கத் தொடங்கிய, பேசும் திறனும் குறைய ஆரம்பித்தது.
அன்பு மகளின் உயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவளது நினைவுகள் நம்மோடு மட்டுமின்றி, வேறு சிலரோடும் நிலைத்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்த லியு ஜிங்யாவோ-வின் பெற்றோர் பயன்படத்தக்க அவளது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மிகச் சிறிய வயது என்பதால் அவளது இரு சிறுநீரகங்களில் ஒன்று மட்டுமே பூரண நிலையில் வளர்ச்சி அடைந்திருந்தது.

அந்த சிறுநீரகம் ஒரு நபருக்கு பொருத்தப்பட்டது. இரு கண் விழிகளும் தலா ஒருவருக்கும், இதயம் மற்றும் ஈரல் தலா ஒருவருக்கும் பொருத்தப்பட்டு அவர்கள் ஐந்து பேரும் நலமாக உடல்நிலை தேறி வருவதாக ஜியாங்ஸி மாகாண அரசு மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவரான ழாங் மிங் (Mang Ming) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், இந்த உலகின் மிகவும் அழகான குட்டி இளவரசியான எனது மகள் எங்களை விட்டு மறைந்தாலும், ஐந்து பேரின் வாழ்க்கைக்கு ஒளியூட்டி விட்டுச் சென்றிருக்கிறாள் என்று கண்ணீர் கலந்த பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.

Read More »

கண்ணும் மூக்கும் இல்லாமல் பிறந்த அபூர்வ சிறுவன்

மொராக்கோவில் அபூர்வமான முறையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளமை மருத்துவ துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. மூன்று வயது சிறுவனான யாஹ்யா எல் ஜாபாலிக்கு இரண்டு கண்களும், மூக்கு இருக்கும் இடத்தில் ஒரே ஒரு சிறு துவாரம் மட்டுமே உள்ளது.

இந்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை செய்ய உதவி செய்யுமாறு சமூக வலைத்தளம் மூலம் கோரப்பட்டிருந்தது. இதனை அறிந்த பாத்திமா பராக்கா என்ற பெண்மணி அவனுக்கு உதவ முடிவு செய்துள்ளார்.

தற்போது அச்சிறுவனை மெல்போர்னுக்கு வரவழைத்துள்ள அவர், அவனை அங்கு அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள டோனி ஹோல்ம்சின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க உள்ளார்.


வங்கதேசத்தை சேர்ந்த ஒட்டிபிறந்த இரட்டையர்களான திரிஷ்ணா மற்றும் கிருஷ்ணா ஆகியோரை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்து தனித்தனி பிறப்புகளாக்கியவர் டோனி ஹோல்ம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

யாஹ்யாவுக்கு வரும் டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இரு பிரிவாக பிரிந்துள்ள அவனது முகப்பகுதியை ஒன்றாக்கி அவனுக்கு மூக்கை உருவாக்க ஹோல்ம்ஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவனது சொந்தமான தசைகளையே பயன்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.

பிறப்பால் வித்தியாசமான முக அமைப்பை கொண்டிருந்தாலும் அவனை அவனது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்வதால் எவ்வித சலனமும் இன்றி மகிழ்ச்சியாகவே யாஹ்யா வாழ்ந்து வருகிறான். ஆனால் அவனை பார்க்கும் மற்றவர்களின் எதிர்ப்பால் தனது கிராமத்தில் எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட அவனது முகத்தை மூடி கொண்டுதான் செல்கிறான். அவனால் வாய் பேசவும் முடியாது என்பதும் வருத்தத்தை அளிக்க கூடிய விஷயமாகும்.

தங்களது மகனின் நிலை பற்றியும் அவனுக்கு யாராவது மருத்துவ சிகிச்சை அளிக்க உதவினால் நன்றாக இருக்கும் என்று தனது நண்பரிடம் யாஹ்யாவின் அப்பா கூறியதால், அந்த நண்பர் சமூக வலைதளம் மூலம் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த பாத்திமா தற்போது அச்சிறுவனுக்கு உதவ முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More »

3 வயதில் 70 கிலோ! கொளு கொளு குண்டு சிறுவன் (வீடியோ இணைப்பு)

பிரேசிலை சேர்ந்த மூன்று வயது சிறுவன், அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது 70 கிலோ உடல் எடையுடன் வலம்வந்து கொண்டிருக்கிறான்.
பிரேசில் நாட்டை சேர்ந்த மைக்கேலின் (Michael) மகன் மிசேல் (Miseal- Age 3) என்ற சிறுவன் ப்ரேடர்-வில்லி சிண்ட்ரோம் (Prader–Willi syndrome) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இதன் காரணமாக அளவுக்கு அதிமாக பசி எடுப்பதுடன், எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும் என இவனை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், பிறக்கும் போது 2.9 கிலோவாக இருந்த அவனது எடை ஒவ்வொரு மாதமும் 2.5 கிலோ உயர்ந்து வருகின்றது.
ஐந்து முதல் ஆறு வேளைகள் அவன் எடுத்துக் கொள்ளும் உணவு, மற்றவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவை விட இரு மடங்காக தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மிசேலை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கே நாங்கள் மிகுந்த சிரமப்படுவதால், அவனுக்காகவே கார் ஒன்றை வாங்கியுள்ளோம் என்றும் மருத்துவமனைக்கு செல்லும்போது பலர் அவனுடன் புகைப்படம் எடுக்க ஆர்வத்துடன் வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Read More »

3 மார்பங்களைக் கொண்டுள்ளதாக பெண் கூறுவது பொய்?

தனக்கு மூன்று மார்பகங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்க யுவதியொருவர் வெளியிட்ட புகைப்படங்க்ள போலியானவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஜெஸ்மின் ட்ரைடெவில் என தன்னை அறிமுகப்படுத்த்திக்கொண்ட யுவதியே பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மூலம் மூன்றாவது மார்பகமொன்றை தான் உருவாக்கிக்கொண்டதாக கூறுகிறார். தன் மீதான ஆண்களின் ஈர்ப்பை குறைப்பதற்காக இவ்வாறு செய்துகொண்டதாகவும் இதற்காக 20,000 அமெரிக்க டொலர்களை தான் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்ர்.

தான் மூன்று மார்பகங்களுடன் காணப்படுவதைப் போன்ற புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டார். ஆனால், அத்தகைய சத்திரசிகிச்சை எதையும் மேற்படி செய்துகொண்டிருக்க மாட்டார் எனவும் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை எனவும் கூறப்படுகிறது. ஜெஸ்மின் ட்ரைடெவில் தனது உண்மையான பெயரை வெளியிடவில்லை. ஆனால், அலிஷா ஹெஸ்லர் எனும் யுவதியே ஜெஸ்மின் ட்ரைடெவில் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களில் தோன்றுகிறார் என அமெரிக்க இணைத்தளமொன்று தெரிவித்துள்ளது.


இவர் ஏற்கெனவே இணையத்தில் போலியான தகவல்களை பரப்பி வேடிக்கை காட்டியவர் எனக் கூறப்படுகிறது. அதேவேளை, சில வாரங்களுக்குமுன் புளோரிடாவிலுள்ள டெம்பா சர்வதேச விமான நிலையத்தில் தனது பயணப்பொதியொன்று திருடப்பட்டுள்ளாக அலிஷா முறைப்பாடு செய்தார் எனவும் அவர் அளித்த காணாமல் போன பொருட்களின் பட்டியலில் 3 செயற்கை மார்பகங்களும் குறிப்பிடப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. -

Read More »